கொல்லிமலையில் அனாதையாக கிடந்த 10 துப்பாக்கிகள் மீட்பு
கொல்லிமலையில் அனாதையாக கிடந்த 10 துப்பாக்கிகளை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் நேற்று கொல்லிமலை திருப்புளிநாடு ஊராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த ரோந்து பணியின்போது படசோலை கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் அனாதையாக 10 நாட்டு துப்பாக்கிகள் கிடந்தன. அவற்றை மீட்ட போலீசார் இது குறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, துப்பாக்கிகளை அனாதையாக போட்டு சென்ற நபர்கள் யார்? இந்த துப்பாக்கிகள் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.