விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் நாகல்நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-11-04 22:45 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாகல்நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு துணை பொதுச்செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அன்பரசு, ஜான்சன்கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா நிர்வாகியை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

மேலும் ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெறவேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும், டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் தமிழ்வேந்தன், மாநில துணை செயலாளர் உலகநம்பி, திண்டுக்கல் தொகுதி செயலாளர் மைதீன்பாவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்