ஆறுமுகநேரி அருகே துணிகரம் ஒரே நாள் இரவில் 2 வீடுகளில் புகுந்து பெண்களிடம் 11 பவுன் நகைகள் பறிப்பு
ஆறுமுகநேரி அருகே ஒரே நாள் இரவில் 2 வீடுகளில் புகுந்து பெண்களிடம் 11 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி,

கார் டிரைவரின் மனைவியிடம்...
ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரை மேல தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவர் சென்னையில் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி (வயது 30). இவர்களுக்கு கார்த்திக் குமரன் (3) என்ற மகன் உள்ளான்.
நேற்று முன்தினம் இரவில் செல்வமணி தனது மகனுடன் வீட்டில் தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த 2 மர்மநபர்கள் நைசாக செல்வமணியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள், தூங்கி கொண்டிருந்த செல்வமணியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த செல்வமணி தனது தாலி சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு, ‘திருடன்... திருடன்...‘ என்று கூச்சலிட்டார். ஆனாலும் மர்மநபர்கள் செல்வமணியை தாக்கி, அவரது தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, இருளில் தப்பி ஓடி விட்டனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று மூலக்கரை பஞ்சாயத்து கந்தன்குடியிருப்பு வடக்கு தெருவில் வசிப்பவர் ஜெயகிருஷ்ணன். இவர் ஆறுமுகநேரியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.
அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர் நைசாக ஜெயகிருஷ்ணன் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்தார். பின்னர் அவர், வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த ஜெயகிருஷ்ணனின் தாயார் பூவரம்மாள் (68) கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அப்போது கண்விழித்த பூவரம்மாள் ‘திருடன்... திருடன்...‘ என்று கூச்சலிட்டார். உடனே ஜெயகிருஷ்ணன் மற்றும் அக்கம்பக்கத்தினர் மர்மநபரை பிடிக்க முயன்றனர். ஆனாலும் மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த புகார்களின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பெண்களிடம் நகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆறுமுகநேரி அருகே ஒரே நாள் இரவில் 2 வீடுகளில் புகுந்து பெண்களிடம் நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.