தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை

தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நேற்று நடந்தது.

Update: 2017-11-04 21:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நேற்று நடந்தது.

மீட்பு குழுக்கள்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசால் பல்வேறு மீட்பு நடவடிக்கை குழுக்கள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் மூலம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பேரிடர் மீட்பு பயிற்சி முடித்த காவலர்களை கொண்டு 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கந்தசாமி, ராஜாராம் ஆகியோர் மேற்பார்வையில் இந்த 5 குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

ஒத்திகை

இதில் 2 பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று காலையில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் மீட்பு பணி குறித்து ஒத்திகை நடத்தினர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை படகு மூலம் எப்படி மீட்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தினர். மேலும் வெள்ள பாதிப்பின்போது பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், பேரிடர் மீட்பு பணி குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் பேரிடர் சம்பந்தமான உதவிகளுக்கு பொதுமக்கள் 0461– 2340650, 0461– 2340700 மற்றும் 9444865877 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று, பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்