1600 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய நகரம் கண்டுபிடிப்பு

மத்திய தரைக்கடலில் 1600 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Update: 2017-11-04 07:24 GMT
துனிசியா நாட்டின் அருகே மத்திய தரைக்கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அந்த நகரம் மூழ்கிக் கிடக்கிறது.

கி.பி. 365-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலில் ஏற்பட்ட சுனாமி அலையால் எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா நகரம், கிரேக்கத்தில் உள்ள கிரேட் தீவு ஆகியவை கடலில் மூழ்கின. அவை கடலுக்குள் மூழ்கிக் கிடந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துனிசியா நாட்டின் அருகே மத்தியக் கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்காம் நூற்றாண்டில் நியாபொலிஸ் என்ற நகரம் கடலில் மூழ்கிய தாக தகவல்கள் உள்ளன. இது அந்த நகரமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நகரில் ஏராளமான கட்டிடங்கள் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பது நன்றாகத் தெரிகிறது. மேலும், அந்நகரில் அந்தக் காலத்திலேயே பல்வேறு தொழிற்சாலைகளும் இருந்துள்ளன. அவையும் நீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன.

அந்தத் தொழிற்சாலைகளில் ஒன்றில், 100 ராட்சதத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தொழிற்சாலை, ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலையாக இருந் திருக்கலாம் என்று கருதப் படுகிறது. 

மேலும் செய்திகள்