சாலை விரிவாக்கத்துக்கு வீடுகள் அகற்றம்: மாற்று குடியிருப்பு கேட்டு கலெக்டரிடம் மனு
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு, முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்குதந்தை டொமினிக் கடாட்சதாஸ் தலைமையில் நேற்று மாலை வந்தனர்.
அழகியமண்டபம்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு, முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்குதந்தை டொமினிக் கடாட்சதாஸ் தலைமையில் நேற்று மாலை வந்தனர். கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களான நாங்கள், முளகுமூடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் குடியிருந்து வருகிறோம். சாலை விரிவாக்க பணிக்காக எங்களின் வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். தற்போது, நாங்கள் அனைவரும் குடியிருக்க வீடின்றி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளோம். எனவே, எங்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.