மதுரை கோட்டத்தில் ரெயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரெயில்களின் நேரத்தில் செய்யப்பட்ட மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2017-11-03 05:03 GMT
மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை-விருதுநகர், மானாமதுரை-ராமேசுவரம், நெல்லை-திருச்செந்தூர், விருதுநகர்-மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் நேரத்தில் செய்யப்பட்ட மாற்றம் நாளை(சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 12 மணிக்கு பதிலாக அரைமணி நேரம் தாமதமாக மதியம் 12.30 மணிக்கு புறப்படும். மேலும், இந்த ரெயில் விருதுநகர் ரெயில்நிலையத்தில் 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். மதுரை ரெயில்நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு ரெயில் வந்து சேரும்.

திருச்செந்தூர்-பழனி பாசஞ்சர் ரெயில் விருதுநகர் ரெயில்நிலையத்தில் ¾ மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். இந்த ரெயில் பழனி ரெயில்நிலையத்துக்கு இரவு 8.20 மணி அல்லது சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றடையும். பழனி-பாலக்காடு டவுன் பாசஞ்சர் ரெயில் பழனி ரெயில்நிலையத்தில் இருந்து இரவு 7.25 மணிக்கு பதிலாக இரவு 8.25 மணிக்கு புறப்படும். ஆனால், வியாழக்கிழமைகளில் மட்டும் இந்த ரெயில்கள் வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும்.

சனிக்கிழமை மட்டும்

மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில்நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். இந்த ரெயில் தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கு காலை 11.45 மணிக்கு சென்றடையும்.

தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை ரெயில் நிலையத்துக்கு மதியம் 12 மணிக்கு அல்லது சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். இந்த ரெயில்கள் சனிக்கிழமைகளில் மட்டும் வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும்.

திருச்சி-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் மானாமதுரை-ராமேசுவரம் இடையே இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் ரெயில் ராமேசுவரத்தில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1 மணிக்கு புறப்படும். மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் பரமக்குடி ரெயில் நிலையத்தில் ¾ மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். இந்த ரெயில் ராமேசுவரம் ரெயில்நிலையத்துக்கு மாலை 5.35 மணிக்கு சென்றடையும்.

நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு பதிலாக காலை 10.40 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மதியம் 12.40 மணிக்கு திருச்செந்தூர் ரெயில்நிலையம் சென்றடையும். திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 9.15 மணிக்கு பதிலாக காலை 10.40 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நெல்லை ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து சேரும்.

தூத்துக்குடி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் திருச்செந்தூர் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.10 மணிக்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு சென்றடையும்.

திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில் ரத்து

திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை இருமார்க்கங்களிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் நெல்லை ரெயில்நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு பதிலாக காலை 10.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மதியம் 12.40 மணிக்கு திருச்செந்தூர் ரெயில்நிலையம் சென்றடையும். தூத்துக்குடி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.25 மணிக்கு சென்றடையும்.

திருச்செந்தூர்-பழனி பாசஞ்சர் ரெயில் நெல்லை ரெயில்நிலையத்துக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும்.

ஈரோடு பாசஞ்சர்

நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயில் நெல்லையில் இருந்து காலை 5.30 மணிக்கு பதிலாக காலை 6.30 மணிக்கு புறப்படும். நெல்லை-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்டிரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நல்லி ரெயில்நிலையத்தில் சுமார் ½ மணி நேரம் மட்டும் நிறுத்தி வைக்கப்படும்.

இந்த மாற்றம் நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். 

மேலும் செய்திகள்