விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாநில பேரவை துணைத்தலைவர் ராஜவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் குமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது, விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பொதுத்துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர், தொழிற்சங்க ஒற்றுமை மைய மாநில செயலாளர் அனவரதன், சி.ஐ.டி.யு. போக்குவரத்துக்கழக பொதுச்செயலாளர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், அகில இந்திய தொழிற்சங்க கூட்டுக்குழு மாவட்ட தலைவர் கணேசன், இந்து மஸ்தூர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.