நிதி நிறுவன அதிபர் உள்பட 2 பேருக்கு வெட்டு: சேலத்தை சேர்ந்த 4 பேர் கைது
பரமத்திவேலூரில் நிதிநிறுவன அதிபர் உள்பட 2 பேரை வெட்டிய வழக்கில் சேலத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விலைஉயர்ந்த பச்சைக்கல்லை அபகரிக்க முயன்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தநகரைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணியன் (வயது54). நிதிநிறுவனம் மற்றும் கல்குவாரி நடத்திவருகிறார். கடந்த 31-ந்தேதி இவரும், பொத்தனூரை சேர்ந்த மதியழகன்(45) உள்ளிட்ட 4 பேர் நிதிநிறுவனத்தில் இருந்தபோது அங்கு வந்த 2 பேர், மணியனிடம் தகராறில் ஈடுபட்டு, பிச்சுவாகத்தியால் மணியன், மதியழகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
படுகாயமடைந்த இருவரும் கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில், பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார், பரமத்தி இன்ஸ்பெக்டர் குலசேகரன் ஆகியோர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் மற்றும் போலீசார் பரமத்திவேலூரில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து, அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் 31-ந்தேதி மணியன், மதியழகனை வெட்டிவிட்டு, மணியனிடமிருந்த விலைஉயர்ந்த பச்சைக்கல் ஒன்றை அபகரித்து செல்வதற்காக வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து காரில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஷாபாய் மகன் ஹயத்பாஷா(37), சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் என்ற எலும்பன் கார்த்திக்(36), சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த முகமது மகன் பாபு(45), சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த சந்திரன் மகன் கேரளா மணி என்ற மணிகண்டன்(33) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
நிதிநிறுவன அதிபர் மணியனின் கல்குவாரியில் விலைஉயர்ந்த பச்சைக்கல் ஒன்று கிடைத்துள்ளது. அதை விற்றுத்தருமாறு அவர் ஹயத்பாஷாவிடம் பச்சைக்கல்லின் புகைப்படத்தை கொடுத்துள்ளார்.
அதன்படி ஹயத்பாஷா தன்னிடம் மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அக்கல்லை வாங்கிக்கொள்வதாக கூறிஉள்ளதாகவும், இதற்காக நேரில்வந்து முன்தொகை தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பச்சைக்கல்லை அபகரிக்கும் நோக்கில் ஹயத்பாஷா, கார்த்திக், பாபு, மணிகண்டன் ஆகியோருடன் ச்சைக்கல்லை விலைபேசுவதுபோல், காரில் ஆயுதங்களுடன், நிதிநிறுவனத்துக்கு வந்துள்ளார்.
பின்னர் ஹயத்பாஷா பணத்தை வாங்கிவருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் உடன் அழைத்துவந்த கார்த்திக், மணிகண்டனை உள்ளே சென்று மணியனை தாக்கிவிட்டு விலைஉயர்ந்த பச்சைக்கல்லை அபகரித்து வரும்படி கூறியுள்ளார். இதில் உள்ளே வந்தவுடன் அவர்கள் மணியனை பிச்சுவாகத்தியால் வெட்டியுள்ளனர். அப்போது மதியழகன் இதைத்தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் வெட்டியுள்ளனர்.
இதைப்பார்த்த அங்கிருந்த நிதிநிறுவன மேலாளர் ஸ்ரீதர், மணியனின் உறவினர் பூபதி ஆகியோர் வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளனர். அப்போது அவர்களை வெளியே இருந்த ஹயத்பாஷா மற்றும் பாபு ஆகியோரும் தாக்கியுள்ளனர். அக்கம், பக்கத்தில் இருந்து பொதுமக்கள் வருவதை பார்த்தவுடன் அங்கிருந்து ஹயத்பாஷா உள்ளிட்ட 4 பேரும் காரில் தப்பிச்சென்று விட்டனர். இந்த தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைதான 4 பேரிடமிருந்து கார், பிச்சுவாகத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை பரமத்தி நீதிமன்ற நடுவர் தனபால் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சேலம் மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் 7 கொலை வழக்குகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.