புனேயில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.39½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
புனேயில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.39½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
புனே,
புனேயில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.39½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரங்கள் உடைப்புபுனே மாவட்டம் கேட் தாலுகா சக்கன் கேம்பஸ் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் காவலாளி யாரும் பாதுகாப்பு பணியில் இல்லை. நேற்று காலை 6 மணி அளவில் வாடிக்கையாளர்கள் இந்த ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க வந்தபோது, உள்ளே இருந்த பணம் எடுக்கும் 2 எந்திரங்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து சக்கன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளைஇதில், நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2 எந்திரங்களையும் உடைத்து உள்ளனர். பின்னர் அந்த எந்திரங்களில் இருந்த ரூ.39 லட்சத்து 59 ஆயிரத்தை கொள்ளை அடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.