அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சையின் போது குழந்தையை தொடர்ந்து தாயும் சாவு
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சையின் போது குழந்தையை தொடர்ந்து தாயும் பரிதாபமாக இறந்தார். மேலும் டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் மெத்தனமாக இருந்ததால் தான் தாயும், குழந்தையும் இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள எசனை காலனி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33). இவர் சவுதியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அனுக்கூரை சேர்ந்த அலமேலுவுக்கும் (30) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது 9-மாத கர்ப்பிணியாக இருந்த அலமேலு அதற்குரிய சிகிச்சையினை மேற்கொண்டு வந்தார். மேலும் முதல் குழந்தை என்பதால் குடும்பத்தினர் அவருக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் தனது தாய் வீடான அனுக்கூருக்கு அவர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அலமேலுவுக்கு திடீரென தலைசுற்றல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற அவர், மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அலமேலுவை பரிசோதித்த டாக்டர்கள் மருந்து, மாத்திரை கொடுத்து விட்டு உடல் வெப்பத்தினால் தான் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. சிறுநீர் கழித்து விட்டால் அடிவயிற்றில் வலி குறைந்து விடும் என அறிவுறுத்தி யுள்ளனர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே உறவினர்களுடன் இருந்த அலமேலுவுக்கு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் தாங்க முடியாமல் துடித்தார். இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரை அழைத்து சென்று உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனை யில் இருந்த டாக்டரிடம் கூறினர். நீண்ட நேரத்திற்கு பின்னரே அட்மிஷன் போடப்பட்டு உள்நோயாளியாக பிரசவகால சிகிச்சைக்கு அலமேலு அனுமதிக்கப்பட்டார். அப்போது பனிக்குடம் உடைந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எப்படியாவது தாயை காப்பாற்றிட வேண்டும் என்பதை அறிந்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அலுமேலுவுக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி செய்வதறியாது திகைத்து நின்றனர். அதன் பின்னர் அலமேலுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று இரவு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பிரசவ சிகிச்சையின்போது குழந்தையை தொடர்ந்து தாயும் இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை அருகே பெரம்பலூர்-துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணி அலமேலுவுக்கு காலதாமதமாக அட்மிஷன் போடப்பட்டிருக்கிறது. குழந்தை இறந்த போதிலும் தாயை காப்பாற்றுங்கள் என டாக்டர்களிடம் கூறினோம். அதற்காக டாக்டர்கள் சொன்னதால் திருச்சி உள்ளிட்ட வெளியிடங்களிலிருந்து மருந்துகள் கூட வாங்கி கொடுத்தோம். எனினும் உரிய சிகிச்சை அளிக்காததாலேயே அவரும் இறந்து விட்டார். அலமேலுவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத் தினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்புலட்சுமி, பெரியசாமி உள்பட போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், அலமேலுவுக்கு கர்ப்பப்பையிலிருந்து சிசு பிரிந்து வந்ததால் ரத்தப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் ஸ்கேன் செய்து பார்த்து சிகிச்சை மேற்கொண்ட போது குழந்தை இறந்துவிட்ட போதிலும் ரத்தப் போக்கை சீர் செய்து அவரை காப்பாற்ற தான் முயற்சித்தோம். எனினும் அவர் இறந்து விட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். கர்ப்பிணியாக இருந்த அலமேலுவை பார்க்க அவரது கணவர் சக்திவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் மனைவி இறந்து விட்டதை எண்ணி அவர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.