விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் நடத்த முடிவு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் நடத்த முடிவு அரியலூர் கலெக்டர் தகவல்;
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங் களில் விவசாயிகளால் கொண்டு வரப்படும் வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதிதாக கட்டப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்ட அலுவலக கட்டிடம் மற்றும் 2000 மெட்ரிக் டன் கிட்டங்கினை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கடந்த மாதம் 20-ந்தேதி அன்று மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெருபான்மையான விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அறிக்கையிடப்படாத மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதி வாரந்தோறும் புதன் கிழமை அன்று மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற உள்ளது. மேலும் அதே நாளில் அறிக்கையிடப்பட்ட முந்திரி ஏலமும் நடைபெற உள்ளது. எனவே, மக்காச்சோளம் மற்றும் முந்திரி பயிரிடும் விவசாயிகள் மறைமுக ஏலத்திற்கு தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்து, மறைமுக ஏலத்தில் வைத்து நல்ல விலை பெறுவதோடு சரியான எடை, கமிஷன், இடைத்தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ள இருப்பதால், தங்கள் வேளாண் விளை பொருட்கள் தரத்திற்கேற்ற அதிகபட்ச விலையினை பெறலாம். மேற்படி நடைபெறும் வர்த்தகத்திற்கு விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணம், இடைத்தரகு மற்றும் கமிஷன் எதுவும் வசூலிக்கப்படு வதில்லை. மேலும் விவரங் களுக்கு அந்தந்த பகுதி ஒழுங்கு முறை விற்பனைக்கூடப் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.