நகராட்சி குப்பை வண்டி சிறைபிடிப்பு பொதுமக்களுடன் நகர்நல அதிகாரி பேச்சுவார்த்தை
கடலூர் கம்மியம்பேட்டையில் குப்பை கொட்ட வந்த நகராட்சி குப்பை வண்டியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் நகர்நல அதிகாரி எழில் மதனா பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடலூர்,
கடலூர் கம்மியம்பேட்டையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. திருப்பாதிரிப்புலியூர் மற்றும் மஞ்சக்குப்பம் பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை கம்மியம்பேட்டை குப்பைக்கிடங்கில் கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் குப்பை கொட்டக்கூடாது எனவும், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மழை பெய்ததால் குப்பை கிடங்கில் சிதறி கிடந்த குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அள்ளி குப்பைமேட்டில் குவிக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது.
இதற்காக குப்பைகள் கிளறப்பட்டதால் துர்நாற்றம் அதிகமாக வீசியது. இதனால், வெகுண்டெழுந்த மக்கள், நேற்று காலையில் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி குப்பை வண்டியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் நகர்நல அதிகாரி எழில் மதனா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு இருந்த பொதுமக்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குப்பைக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க பிளச்சிங் பவுடர் தெளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அதன் பேரில் குப்பை வண்டியை பொதுமக்கள் விடுவித்தனர்.