திருவாரூரில் பலத்த மழை குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
திருவாரூரில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவாரூர்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30-ந் தேதி தொடங்கிய மழை 2 நாட்கள் கொட்டி தீர்த்தது. இதனால் சம்பா நடவு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கும் நிலையில் உள்ளது. வயல்களில் இருந்து தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை திருவாரூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. பலத்த மழையினால் திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
திருவாரூர் அருகே சேந்தமங்கலம் பகுதியில் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லாததால் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விஷ பூச்சிகள் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூரில்-3 மில்லிமீட்டரும், திருத்துறைப்பூண்டியில்-4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.