தடுப்பு கம்பிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பலி

தூத்துக்குடியில் தடுப்பு கம்பிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-11-02 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தடுப்பு கம்பிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கூலித்தொழிலாளி

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 65) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு சென்றார். பின்னர் ஊருக்கு வருவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார்.

அப்போது, அங்கு இந்திரா நகரைச் சேர்ந்த முருகராஜ் (34) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் சூர்யா லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார். தூத்துக்குடி–பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் நடுவே இருந்த இரும்பு தடுப்பு கம்பிகள் மீது மோதியது.

சாவு

இதில் சூர்யா, முருகராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முருகராஜ் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், முருகராஜ் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியது தெரியவந்தது.

மேலும் செய்திகள்