குலசேகரத்தில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

குலசேகரத்தில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2017-11-01 22:45 GMT
குலசேகரம்,

குலசேகரம் பிரண்ட்ஸ் ஆப் நேச்சர் அமைப்பு சார்பில் இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி நேற்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

குலசேகரம் தும்பங்கோடு பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த மினி மாரத்தான் போட்டியை மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். குலசேகரம் சீட்ஸ் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகி சர்வேஸ்வரி வரவேற்று பேசினார்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்துகொண்டவர்கள் இயற்கையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷமிட்டபடி சென்றனர். தும்பக்கோடு பஸ் நிலையத்தில் தொடங்கிய ஓட்டப்பந்தயம் ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. பள்ளி மைதானத்தில் நிறைவு பெற்றது.

அதை தொடர்ந்து பள்ளியில் இயற்கையை பாதுகாப்பது தொடர்பாக கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்