ஏரி, குளங்களை ரூ.400 கோடியில் தூர் வாரியது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் ரூ.400 கோடியில் ஏரி, குளங்கள் தூர்வாரியது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சி,
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு முடிந்ததும் மு.க.ஸ்டாலின் திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் குண்டூர் அய்யம்பட்டியில் தூர்வாரப்பட்ட சந்தூரணி குளத்தை பார்வையிட்டார்.
குண்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்மேடிட்டு, புதர் மண்டி கிடந்தது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த குளத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. தனது சொந்த நிதி ரூ. 5 லட்சத்தில் சுமார் 10 அடி ஆழத்துக்கு மண்ணை அள்ளி அப்புறப்படுத்தி தூர்வாரி உள்ளார்.
குளம் தூர்வாரப்பட்ட பணியை பார்வையிட்ட பின்னர் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் இருக்கிற ஏரி, குளங்களை தூர்வாரினால் தான் மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க கூடிய சூழ்நிலை ஏற்படும் என்ற அடிப்படையில் தி.மு.க. தூர்வாரும் பணியை முன்னின்று நடத்தி வருகிறது. குறிப்பாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க கூடிய தொகுதிகளில் தி.மு.க. செயல் தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் என்னுடையை வேண்டுகோளை ஏற்று இந்த பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.
ஆனால் இதுபற்றி எல்லாம் தமிழகத்தில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அரசு கவலைப்படவில்லை. சட்டமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பி அரசு தலையிடவேண்டும் என கேள்வி கேட்ட போது அதற்கு பதில் அளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வாரும் குடிமராமத்து திட்டத்திற்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
சேலத்தில் மிகப்பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றாலும் அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் என்ற பெயரில் ஒரு பெரிய நாடகத்தை நடத்தி இருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. அந்த கூட்டத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரி பாதுகாக்கப்பட்டு இருப்பதாக அப்பட்டமான பொய்யை தைரியமாக எடுத்துக்கூறி இருக்கிறார்.
அது உண்மையானால் குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடி மூலம் எந்தெந்த மாவட்டத்தில், எந்த ஊராட்சியில் எத்தனை தூர்வாரும் பணி நடந்து இருக்கிறது என்பது பற்றி பட்டவர்த்தனமாக வெள்ளை அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட தயாராக இருக்கிறாரா? என தமிழக மக்கள் சார்பில், எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பேரம் பேசி கமிஷன் பெற்று லஞ்சம் வாங்குகிற நிலை தான் உள்ளது. ஏரி, குளங்கள் தூர்வாருவதை விட்டு, விட்டு அரசின் கஜானாவை தூர் எடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். குட்காவில் ஊழல் செய்தவர்கள் இப்போது குடிமராமத்து பணியில் ஊழல் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இதை அவர்கள் மறுப்பார்கள் என்றால் உண்மையில் ரூ.400 கோடியில் எத்தனை ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது, எவ்வளவு பணிகள் நடந்து உள்ளன? என்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக உடனே வெளியிடவேண்டும்.
ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என நாங்கள் வழக்கு தொடரவில்லை. அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் குழப்பத்தை சரி செய்யவேண்டும், ரூ.89 கோடி பணபரிவர்த்தனை நடந்து இருப்பதாக வருமான வரித்துறை சுட்டிக்காட்டியது, குட்கா புகழ் அமைச்சர் வீட்டில் நடந்த சோதனைகள் நடந்ததற்கான பரிகாரங்களை செய்யவேண்டும் என்று தான் கேட்டு இருந்தோம். ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளைக்கே வந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை தொடக்கத்திலேயே சமாளிக்க முடியாத மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் தான் மழை தொடங்குவதற்கு முன்பாகவே அடிப்படை வசதிகள் தொடர்பான வேலைகளை தொடங்கி இருக்கவேண்டும் என கூறிய போது எதிர்க்கட்சி தலைவருக்கு வேறு வேலை இல்லை, என கொச்சையாக விமர்சனம் செய்து பேசினார்கள். இப்போது அமைச்சர் ஒருவர் அமெரிக்கா, லண்டனில் இருப்பது போல் வடிகால் வசதி செய்யப்பட்டு இருப்பதாக கூறுகிறார். மழை நீர் வடியாமல் நின்றால் செல்லூர் ராஜூ போன்ற விஞ்ஞானிகள் தெர்மாகோல் மூலம் தண்ணீரை வடிய வைப்பார்களோ? என்னவோ தெரியவில்லை. காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது வேலையை மேலும் 31 இடங்களில் செய்வதற்கு, தனியாக நிதி பெற்றுக்கொண்டு இந்த அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.