அடிக்கடி விபத்துகள் நடக்கும் ரெயில்வே மேம்பாலத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
ராணிப்பேட்டையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் ரெயில்வே மேம்பாலத்தை மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.;
சிப்காட் (ராணிப்பேட்டை),
சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை சாலை (என்.எச்.4-எம்.பி.டி.ரோடு) தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் சாலை ஆகும். இந்த சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
இந்த சாலையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் இருந்து சிப்காட் செல்லும் வழியில் நவல்பூர் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலம் மிகக்குறுகிய அளவே இருப்பதால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடப்பதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது. மேலும் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன.
இதற்கிடையில் வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ, கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லிக்கு சென்றிருந்தபோது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இது குறித்து தெரிவித்து புதிய மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டைக்கு வந்தார். அவர் சம்பந்தப்பட்ட மேம்பாலத்தை பார்வையிட்டார். இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது ராணிப்பேட்டை ஆர்.காந்தி.எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.