சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவித் தொகை

ஆரணி அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவித் தொகையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2017-11-01 22:45 GMT
ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமம் மாத கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன். கூலித் தொழிலாளி. குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு நித்யா (வயது 13) என்ற மகள் இருந்தாள். இவள், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நித்யா மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதனையடுத்து பலியான மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு உதவி கலெக்டர் கிருபாகரன் தலைமை தாங்கினார். தூசி மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, நித்யாவின் பெற்றோரிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலை வழங்கி ஆறுதல் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தாசில்தார் ஆ.சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வக்கீல் கே.சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்