அரியலூரில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள்

அரியலூரில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

Update: 2017-11-01 22:45 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் (பொறுப்பு) ராம சுப்பிரமணியராஜா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2017-2018-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து, கால்பந்து, பிரி ஸ்டைல் பட்டர் பிளை நீச்சல், 100, 200, 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆகிய விளையாட்டு போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் பயிலும் 400 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

பரிசு

தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தடகள போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும், குழுபோட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை பயிற்றுனர்கள் பொற்கொடி லெனின், ஹரிகரன் சதிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்