தஞ்சையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி
தஞ்சையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சியினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மே மாதம் 21-ந் தேதி நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி, மேக்ஸ்வெல் மெட்ரிக்பள்ளி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உள்பட 12 மையங்களில் நடந்தது. இந்த தேர்வினை 11 ஆயிரத்து 848 பேர் எழுதினர்.
இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
இதைத்தொடர்ந்து உடல் தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு இறுதியாக தேர்வான 205 போலீசாருக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு அளிக்கப்படும் இந்த அடிப்படை பயிற்சி 7 மாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போலீசாருக்கு சட்ட நுணுக்கங்கள் பற்றியும், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வது பற்றிய பயிற்சியும், அணிவகுப்பு முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.