நூதன முறையில் மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது

ஆரல்வாய்மொழியில் நூதன முறையில் மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது

Update: 2017-11-01 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையிலான போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 2 மணியளவில் அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் சாக்கு மூடைகள் அடுக்கப்பட்டு இருந்தன. இதைகண்ட போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது டிரைவர், நாகர்கோவிலுக்கு புண்ணாக்கு மூடைகள் ஏற்றி செல்வதாக கூறினார்.

உடனே போலீசார் லாரியின் பக்கவாட்டில் தட்டி பார்த்தனர். அப்போது, வித்தியாசமான சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியின் மேல்பகுதிக்கு சென்று ஒரு மூடையை பிரித்து பார்த்தபோது, அதில் தேங்காய் நார் இருந்தது. மேலும், லாரியில் அடுக்கப்பட்டுள்ள மூடைகளுக்கு கீழ் பகுதியில் மணல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். டிரைவரிடம் அதற்கான ஆவணங்களை கேட்டபோது, எந்த ஆவணமும் இல்லாமல் மணலை நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது.உடனே போலீசார் லாரியின் டிரைவரான மீனச்சல் அருகே உள்ள எரித்தாவூரைச் சேர்ந்த பிஜூ(வயது 32)என்வரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும், டிரைவரிடம் நடத்திய விசாரணையில் விராலிமலையில் இருந்து நாகர்கோவிலுக்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்