திருச்சியில் குப்பையை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
திருச்சியில், குப்பையை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.
திருச்சி,
திருச்சி மேலசிந்தாமணி கொத்தமேட்டுத்தெருவில், சுற்றுப்புறங்களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொத்தமேட்டுத்தெரு, பழைய கரூர்ரோடு, நடுத்தெரு, காவேரி பார்க், குடமுருட்டி, சஞ்சீவிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று காலை மைய கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
தகவல் அறிந்து அங்கு மாநகராட்சி இளநிலை பொறியாளர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீரங்கம்
இதேபோல ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை புதுத்தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தரம் பிரித்து உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் ரேஷன் கடை அருகே உள்ள இந்த இடத்தை ஸ்ரீரங்கம் மாநகராட்சி உதவி ஆணையர் ஞானவேல் நிகாதீபன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்று ஆய்வு செய்தனர்.
இதற்கு அப்பகுதி மக்களும், தீயணைப்பு துறையினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் கருத்து
இதுகுறித்து அம்மாமண்டபம் புதுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இந்த நிலத்திற்கு அருகில் ரேஷன்கடை, அங்கன்வாடி மையம், தீயணைப்பு நிலையம் உள்ளதால் இங்கு குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் ஏற்படுத்தினால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பகுதியில் குப்பை பிரிக்கும் மையம் அமைக்க கூடாது. மீறி அமைத்தால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.