புதுச்சேரி விடுதலை நாள்: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்

புதுவை விடுதலை நாளையொட்டி கடற்கரையில் நடந்த கோலாகல விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றினார்.

Update: 2017-11-02 00:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி விடுதலை நாள் விழா கடற்கரை காந்தி திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழா நடக்கும் இடத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி காலை 8–55 மணிக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா விழா மேடைக்கு அழைத்து வந்தார்.

விழாமேடைக்கு வந்த முதல்–அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.

அதன்பின் முதல்–அமைச்சர் நாராயணசாமி நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு திரும்பி விடுதலை நாள் விழா உரையாற்றினார்.

அதைத்தொடர்ர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர்படை, பள்ளி, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. அதன்பின் பல்வேறு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

கடற்கரை காந்தி திடலில் இருந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுவை சட்டசபைக்கு வந்தார். அங்கு சட்டசபை வளாகத்தில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், அரசு செயலாளர்கள் கந்தவேலு, பார்த்திபன், மிகிர்வரதன், மணிகண்டன், செந்தில்குமார், சுந்தரவடிவேலு, கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ்ரஞ்சன், அபூர்வா குப்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்