கட்சி கொடி எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடி மற்றும் கேரளா முதல்–அமைச்சரின் உருவப்படம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் எரித்துள்ளனர்.

Update: 2017-11-01 22:45 GMT

திருப்பூர்,

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடி மற்றும் கேரளா முதல்–அமைச்சரின் உருவப்படம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் எரித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில் திருப்பூர் குமரன்சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில குழு உறுப்பினர் முத்துகண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காமராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கொடி மற்றும் உருவப்படத்தை எரிந்த மர்ம நபர்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அந்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்