அச்சரப்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்
அச்சரப்பாக்கம் பேரூராட்சி லூப்ரோடு மற்றும் ராவுத்தநல்லூர் பகுதிகளில் கனமழையால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தேங்கி நின்றது.
அச்சரப்பாக்கம்,
அச்சரப்பாக்கம் பேரூராட்சி லூப்ரோடு மற்றும் ராவுத்தநல்லூர் பகுதிகளில் கனமழையால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தேங்கி நின்றது. பேரூராட்சி செயல் அலுவலர் வி.ராஜேந்திரன் மேற்பார்வையில் ஊழியர்கள் வி.ஐ.பி நகர் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயை அகலப்படுத்தி தேங்கிய மழைநீரை வெளியேற்றினர்.
மேலும் லூப்ரோட்டில் தேங்கிய மழைநீரை கால்வாய் சரிசெய்து வெளியேற்றினர்.
இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மழை காரணமாக குடியிருப்புகளில் தேங்கிய நீரை அதிகாரிகள் ராட்சத எந்திரம் மூலம் அகற்றினர்