அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.
அரியலூர்,
அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை நாள் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய ஒற்றுமைக்காக அனைத்துத்துறை அலுவலர்களின் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்பன உள்ளிட்ட உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் அதனை திரும்பக்கூறி உறுதி மொழியை ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்- தணிக்கை) பாலன், அலுவலக மேலாளர் மகாராஜன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூரில்...
இதேபோல், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தலைமையில் நேற்று அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இனம், மொழி, மதம் உள்ளிட்டவற்றால் நாம் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர் என்பதை வலியுறுத்தி ஒற்றுமைக்கான உறுதிமொழியை அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலாஜி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.