பாலம் இல்லாததால் வாய்க்காலில் இறங்கி மூதாட்டி உடலை மயானத்துக்கு எடுத்து சென்ற பரிதாபம்
மயிலாடுதுறை அருகே பாலம் இல்லாததால் வாய்க்காலில் இறங்கி மூதாட்டி உடலை மயானத்துக்கு எடுத்து சென்று அடக்கம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டது.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆச்சியம்மாள் (வயது 70). இவர், நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய பாடையில் வைத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு தூக்கி சென்றனர். இந்த மயானத்துக்கு செல்லும் வழியில் அய்யாவையனாறு வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடந்துதான் மயானத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் வாய்க்காலை கடக்க பாலம் இல்லாததால், வாய்க்காலில் 5 அடிக்கு மேல் செல்லும் தண்ணீரில் இறங்கி பாடையை தூக்கி சென்றனர். பின்னர் இறந்துபோன மூதாட்டியின் உடலை மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்த பரிதாப நிலை பல ஆண்டுகளாக தொடர்வதாக கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் மழைக்காலங்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்களது உடலை அடக்கம் செய்ய அய்யாவையனாறு வாய்க்காலில் இறங்கி மிகுந்த சிரமப்பட்டு தான் உடலை தூக்கி செல்ல வேண்டும். சில சமயங்களில் 7 அடிக்கு மேல் வாய்க்காலில் தண்ணீர் செல்லும். அப்போது இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும்போது, பாடையின் அடிபகுதியில் கார் டயர்களின் டியூப்களை கட்டிவிடுவோம். பின்னர் வாய்க்கால் தண்ணீரில் பாடையை இறக்கிவிடுவோம். பாடை தண்ணீரில் மிதந்து செல்லும்போது வாய்க்காலில் இறங்கி நீச்சல் அடித்து கொண்டு பாடையில் கட்டப்பட்ட கயிறை இழுத்து செல்வோம். கரை வந்தவுடன் பாடையை வாய்க்காலில் இருந்து எடுத்து இறந்தவர்களின் உடலை மயானத்தில் அடக்கம் செய்வோம். இதுபோன்று ஒவ்வொரு மழைக்காலத்தின்போது சிரமப்பட்டு வருகிறோம். இந்த வாய்க்காலில் பாலம் கட்டி தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எந்த மக்கள் பிரதிநிதிகளும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அரசு அதிகாரிகளும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட வாய்க்காலில் பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.