சேலம் செவ்வாய்பேட்டையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சேலம் செவ்வாய்பேட்டையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Update: 2017-10-31 22:45 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் முரளி. இவர், நேற்று இரவு 10 மணியளவில் சேலம் செவ்வாய்பேட்டைக்கு காரில் வந்தார். பின்னர், அவர் செவ்வாய்பேட்டை அப்புச்செட்டி தெரு பகுதியில் காரை நிறுத்திவிட்டு ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது, அந்த கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நின்றவர்கள் அலறியடித்து கொண்டு சற்று தூரமாக ஓடினர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் கார் எரிந்து சேதமானது. கியாஸ் கசிவு காரணமாக காரில் தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்