தஞ்சை மாவட்டத்திற்கு நாளை வரும் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
தஞ்சை மாவட்டத்திற்கு நாளை வரும் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு அ.தி.மு.க. (அம்மா அணி) மாவட்ட செயலாளர் மா.சேகர் அறிக்கை;
ஒரத்தநாடு,
அ.தி.மு.க. (அம்மா அணி) தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது-
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் தொண்டராம்பட்டு சு.ஆசைத்தம்பி மற்றும் சோழகன்குடிக்காடு ஏ.நடராஜன் ஆகியோரது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (வியாழக்கிழமை) காலை தஞ்சை மாவட்டத்திற்கு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலையில் தஞ்சை மேல வஸ்தாசாவடியில் டி.டி.வி. தினகரனுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் தஞ்சை மாநகரம் மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பிலும், புதுக்கோட்டை பிரிவு சாலை அருகில் (கமலா சுப்பிரமணியம் பள்ளி அருகே) திருவையாறு தொகுதி கழகம் சார்பிலும், பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை அருகில் தஞ்சை தெற்கு ஒன்றிய கழகம் சார்பிலும், சூரக்கோட்டை பிரிவு சாலை அருகில் பாபநாசம் தொகுதி கழகம் சார்பிலும், தென்னமநாடு வல்லம் பிரிவு சாலை அருகில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழகம் சார்பிலும், ஒரத்தநாடு அண்ணாசிலை அருகில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகம் சார்பிலும் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.