முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு இந்து முன்னணி பிரமுகருக்கு வலைவீச்சு

துடியலூர் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தஜோதி என்பவரது மகன் ரஞ்சித் தனியார் நிறுவன ஊழியர்.

Update: 2017-10-31 21:45 GMT

துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தஜோதி என்பவரது மகன் ரஞ்சித் (வயது 19). தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் கவுதம். இவர்கள் 2 பேருக்கும், அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளரான படையப்பா என்கிற முத்துக்குமார் (37) என்பவருக்கும் இடையே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏ.கே.எஸ். நகர் அருகே வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ரஞ்சித்தை, முத்துக்குமார் வழிமறித்து தகராறு செய்தார். தகராறு முற்றவே முத்துக்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரஞ்சித்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனிடையே முத்துக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் அந்த வழியே வந்தவர்கள் ரஞ்சித்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்