திருவள்ளூர் கலெக்டர் அலுவவலகத்தில் தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி ஏற்பு
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வாசிக்க அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வாசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சக்திவேல், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர்கள் கணேசன், பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.