ஒட்டன்சத்திரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஒட்டன்சத்திரத்தில் தாலுகா அலுவலகம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது.

Update: 2017-10-31 22:45 GMT

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரத்தில் தாலுகா அலுவலகம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள கணினிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து கணினி சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பத்திர பதிவு பணிகள் நடைபெறாமல் இருப்பதை கண்டித்து நேற்று முன்தினம் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது கணினி சரி செய்யும் பணி முடிவடைந்ததும் பத்திர பதிவுகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 இந்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்த பொதுமக்கள் கணினி சரி செய்யப்படாமல் இருப்பதை அறிந்து ஆத்திரம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் பழுதான கணினிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் பதிவாளர் வீரமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கணினி சரி பார்க்கும் பணி நாளை (இன்று) முடிவடைந்து விடும். அதன் பின்னர் பத்திர பதிவுகள் நடைபெறும் என்று அவர் கூறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்