ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை கடிதம் சிக்கியது; பரபரப்பு தகவல்

ஓட்டப்பிடாரம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-31 20:30 GMT
ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது, அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவலை எழுதி வைத்துள்ளார்.

என்ஜினீயரிங் மாணவி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் மாமூல்ராஜ் (வயது 44). இவருடைய மனைவி மேரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

மூத்த மகள் வினிதா (18), தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 2 நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லையாம்.

தற்கொலை

நேற்று மாலையில், வீட்டில் யாரும் இல்லாத போது வினிதா, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் வினிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், வினிதா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில், எனக்கு படிக்க முடியவில்லை. என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள். என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி இருந்தார்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்