பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பூச்சிமருந்து கேனை கொண்டு வந்த பெண்ணால் பரபரப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பூச்சி மருந்து கேனை கொண்டு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, கந்து வட்டி கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல் கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்குளித்து இறந்தனர். இது போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாலதி, சுப்புலட்சுமி உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலின் அருகே, கும்பலாக வந்த நபர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் சார்பில் 5 முதல் 10 பேர் மட்டுமே மனு கொடுக்க உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் கலெக்டர் அலுவலக கட்டிட வாயிலில் நின்று கொண்டிருந்த போலீசார், அங்கு வரும் பொதுமக்களின் கைப்பை, பாலித்தீன் கவர் உள்ளிட்டவற்றை சோதனை செய்து மண்எண்ணை கேன், விஷமருந்து பாட்டில் உள்ளிட்டவை இருக்கிறதா என சோதனை செய்தனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே குன்னம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் மனு கொடுக்க வந்திருந்தார். அவரை சோதனை செய்த பெண் போலீஸ் ஒருவர், சிறிய கேன் ஒன்றை எடுத்தார். மண்எண்ணெயாக இருக்கு மோ என நினைத்து அந்த பெண் போலீஸ் உடனே அதனை எடுத்து கொண்டு உயரதிகாரியிடம் கொடுக்க சென்றார். இதையடுத்து மனு கொடுக்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது, தனது கணவர் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்த போது உடலில் விஷம் கலந்து இறந்து விட்டார். அந்த பூச்சி மருந்து பாட்டிலை கலெக்டரிடம் காண்பிப்பதற்காகவே எடுத்து செல்கிறேன் என விளக்கம் கொடுத்தார். அதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.