பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் காமராஜர் சிலை அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கல்பட்டு,
இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் கே.பால் தலைமை தாங்கினார். கணபதி, ஏழுமலை, மணி முன்னிலை வகித்தனர். சுப்பிரமணி வரவேற்றார். சமூக ஆர்வலர்கள் துரைபாபு, திருத்தேரி டி.சி.ரவி, கே.சந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கணேசன், பாலாஜி, சேகர், பீட்டர், சிவகோட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர்கள் வழங்கினார்கள்.