வயிற்றில் ஈரத்துணி கட்டி பாசிக் ஊழியர்கள் நூதன போராட்டம்

வயிற்றில் ஈரத்துணி கட்டி பாசிக் ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-21 22:46 GMT

புதுச்சேரி,

பாசிக் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 40 மாத சம்பளத்தை வழங்கவேண்டும், தற்போது 70 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வரும் சம்பளத்தை முழுவதுமாக வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று 54–வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் தலைமை அலுவலகம் முன்பு வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தலைவர் அப்துல்லாகான் தலைமை தாங்கினார்.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போராட்டத்தில் செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன், துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்