விழுப்புரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்

தே.மு.தி.க. சார்பில் விழுப்புரத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்பது என கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.திக. ஆலோனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-10-21 23:00 GMT
கடலூர்,

தே.மு.தி.க. கடலூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் கடலூர் பாரதிசாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ராஜாராம், பொருளாளர் பி.ஜே.எக்ஸ்.வேதநாயகம், துணை செயலாளர் லெனின், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடலூர் நகர செயலாளர் வி.சி.சரவணன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், பண்ருட்டி நகர செயலாளர் அக்பர், ஒன்றிய செயலாளர்கள் சித்தானந்தன், அய்யனார், பார்த்தசாரதி, முத்து கிருஷ்ணன், சரவணன், வேல்முருகன், தென்னரசு, முத்துக்குமரன், குறிஞ்சிப்பாடி பேரூர் செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்காத சர்க்கரை ஆலை நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து நாளை மறுநாள்(செவ்வாய்க் கிழமை) விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதற்காக 100 வாகனங்களில் விழுப்புரத்துக்கு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் செய்திகள்