வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் டிசம்பருக்குள் சரிசெய்யப்பட்டு விடும் அதிகாரி தகவல்
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் டிசம்பருக்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ரீட்டாஹரீஷ் தாக்கர் தெரிவித்தார்.;
சேலம்,
2018 ஜனவரி மாதத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தப்பணிகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளருமான ரீட்டாஹரீஷ் தாக்கர் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி முன்னிலை வகித்தார்.
இதில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், சித்ரா, மனோன்மணி, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் கலையமுதன், நகர செயலாளர் ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன், பாரதீய ஜனதா கட்சி மாநகர தலைவர் கோபிநாத், பகுஜன் சமாஜ் கட்சி செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது தி.மு.க. தரப்பில் கலையமுதன் பேசுகையில்,“சேலம் வடக்கு தொகுதியில் இறந்தவர்கள்-1071, இரட்டைப்பதிவு-416, இடமாற்றம்-1174 என 2,607 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்காமல் உள்ளது. இதுபோல தெற்கு சட்டமன்ற தொகுதியில் இறந்தவர்கள்-1174, இரட்டைப்பதிவு-215, இடமாற்றம்-2618 என 4,007 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்காமல் உள்ளது. இதுபோல ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைபாடு உள்ளது. சேலம் வடக்கு தொகுதியில் பாகம் 194-ல் ஒரே வாக்காளர் பெயர் தொடர்ச்சியாக 4 இடங்களில் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஏராளமானோர் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு உள்ள வாக்காளர் அடையாள அட்டையையே பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு மாற்று வாக்காளர் அட்டை வழங்க வேண்டும்“ என்றார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல் பேசுகையில்,“18 வயது பூர்த்தியானவர்களுக்கு வயது சான்றிதழ் உள்ளிட்ட ஆவணம் தேவை என்று விழிப்புணர்வு உள்ளது. ஆனால், இறந்தவர் பெயர் நீக்கம் செய்ய, இறப்பு சான்றிதழ் வேண்டுமா? வேண்டாமா? என்ற வரையறை தேர்தல் ஆணையத்தால் சொல்லப்படவில்லை. எனவே, பெயர் நீக்கம் செய்வதில் குழப்பம் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்“ என்றார்.
கலெக்டர் ரோகிணி பேசுகையில்,“அரசியல் கட்சியினரின் கருத்தை வரவேற்கிறோம். சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதியிலும் 100 சதவீதம் வீடு, வீடாக ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில், 12,521 பேர் இறந்துள்ளது கண்டறியப்பட்டு அவை, நீக்கப்பட்டியலில் உள்ளது. அரசியல் கட்சியினர் கொடுக்கும் தகவலின்பேரில், உறுதி செய்யப்பட்டு நீக்கப்பட்டியல் கொடுக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ரீட்டாஹரீஷ் தாக்கர் பேசுகையில்,“வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளதும், முகவரி மாற்றம் உள்ளிட்ட கருத்துகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சரி செய்யப்படும். பழைய வாக்காளர் அட்டை வைத்திருப்போர் இ-சேவை மையங்களில் அதற்குரிய எண்ணை கொடுத்து புதிய அட்டை பெற்று கொள்ளலாம். ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளதால், டிசம்பர் மாதம் மீண்டும் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் திருத்தங்கள் சரி செய்யப்பட்டு விடும்” என்றார்.