குப்பை, இறைச்சிக்கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
சேலம் திருமணிமுத்தாற்றில் குப்பை, இறைச்சிக்கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
சேலம்,
சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 29-வது வார்டு ஸ்வர்ணாம்பிகை நகர் பகுதியில் உள்ள திருமணி முத்தாற்றில், டிராக்டர் புல்டோசர் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அதை மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- பொது சுகாதார மேம்பாட்டிற்காக திருமணி முத்தாறு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருமணி முத்தாறு பகுதியையொட்டி வாழும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை மாநகராட்சி சார்பில், வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். மேலும் தங்களது இல்லம் தேடி திடக்கழிவுகளை சேரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அதைவிடுத்து, குப்பைகளை திருமணி முத்தாறு பகுதிகளில் கொட்டக்கூடாது. மேலும் 28 மற்றும் 32 ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை திருமணி முத்தாறு ஆற்று பகுதிகளில் கொட்டக் கூடாது. அதை கண்காணிக்க, பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், திருமணி முத்தாற்றில் குப்பை, இறைச்சிக்கழிவுகளை கொட்டுவோர்களை அடையாளம் கண்டு, அபராதத் தொகை வசூலிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு பொதுசுகாதாரம் சட்டத்தின்கீழ் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது செயற்பொறியாளர் அசோகன் உடன் இருந்தார்.