வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இன்று நடக்கிறது

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Update: 2017-10-21 20:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 3–ந்தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமசபைகள் ஆகியவற்றில் வாக்காளர் பெயர்கள் சரிபார்ப்பதற்காக வைக்கப்பட்டு உள்ளது.

1.1.2018–ஐ தகுதி நாளாக கொண்டு 31.12.1999 வரை பிறந்தவர்கள் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்கலாம். வாக்காளர் இறப்பு, இரட்டை பதிவு மற்றும் குடிபெயர்ந்தவர்கள் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யலாம்.

சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்–6 வாங்கி, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முகாமில் படிவங்களை பெறுதல், பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்