செங்கல் சூளைக்குள் புகுந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

கோவை அருகே செங்கல் சூளைக்குள் புகுந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு;

Update: 2017-10-20 22:45 GMT
துடியலூர்,

கோவையை அடுத்த தடாகம் அருகே வீரபாண்டி புதூர் கிராமத்துக்குள் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுயானை நுழைந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள செங்கல் சூளைக்குள் புகுந்து பனை மர கட்டைகளையும், மட்டைகளையும் தின்றது. தொடர்ந்து அங்குள்ள தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு, அங்கேயே முகாமிட்டது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை திடீரென ஆவேசமடைந்து, அவர்களை துரத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் அனுவாவி சுப்பிரமணியசாமி கோவில் வனப்பகுதிக்குள் காட்டுயானை விரட்டியடிக்கப்பட்டது. அந்த காட்டு யானை மீண்டும் கிராமத்துக்குள் நுழையாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்