மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை: 2 போலி டாக்டர்கள் கைது
சேலம் மாவட்டத்தில் நடந்த திடீர் சோதனையில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தலைவாசல்,
சேலம் மாவட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணிக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தலைவாசல் அருகே வீரகனூர் பஸ் நிலையம் அருகில் விஜயகுமார் (வயது 57) என்பவர் நடத்தி வந்த கிளினிக்கில் நேற்று டாக்டர்கள் தங்கத்தாயி, குமுதா ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள். மேலும், விஜயகுமாரிடமும் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதியில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுகுறித்து டாக்டர்கள் குழுவினர் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டரான விஜயகுமாரை கைது செய்தார். மேலும், அவரது கிளினிக்கில் இருந்த ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் வாழப்பாடி செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜராஜன் (38) என்பவர் பேளூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார். அவரது கிளினிக்கில் நேற்று வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சிவலிங்கம் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள். மேலும், ராஜராஜனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் அவர் பி.ஏ. படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் சிவலிங்கம் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜராஜனை கைது செய்தனர். அவரது கிளினிக்கில் இருந்த மருத்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.