திருச்சியில் 26-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம்
திருச்சியில் 26-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி பங்கேற்பு
திருச்சி,
திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது பற்றி அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். டி.ரத்தினவேல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சக்திகணேஷ் (சட்டம்-ஒழுங்கு), மயில்வாகனன் (குற்றம்-போக்குவரத்து), உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.