பாலாற்றில் சேற்றில் சிக்கி தொழிலாளி சாவு

காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் தமிழ் அழகன் (வயது 23). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

Update: 2017-10-20 23:00 GMT

காஞ்சீபுரம்,

இந்த நிலையில் இவர் காஞ்சீபுரம் பாலாற்றில் உறவினர்களுடன் குளிக்க சென்றார் பாலாற்றில் ஒரு அடி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது.

அவர் குளித்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள பள்ளத்தில் கால் வைத்தார். அப்போது அவர் சேற்றில் சிக்கி தத்தளித்தார்.

அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன், மாகரல் சப்–இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்