சோழவந்தான் அருகே சுமைதூக்கும் தொழிலாளி கொலை
சோழவந்தான் அருகே சுமைதூக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் செல்லத்துரை (வயது 26). இவர் மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்றுமுன்தினம் மன்னாடிமங்கலம் சாலை பதனீர்கடை அருகே கொலை செய்யப்பட்டு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காடுபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்லத்துரை உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.