பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க முத்ரா திட்டம் மூலம் கடன் வழங்க வேண்டும்
படித்து வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறும் வகையில்
காரைக்கால்,
அவர்களுக்கு முத்ரா திட்டத்தின் மூலம் தாராளமாக கடன் வழங்க முன்வர வேண்டும் என்று வங்கிகளுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
காரைக்கால் மாவட்டம் அம்மாள்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபத்தில், புதுச்சேரி அரசு மற்றும் புதுவை மாநில வங்கியாளர் குழுமம் சார்பில் முத்ரா திட்ட கடன் உதவி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
முகாமில் அவர் பேசியதாவது:-
தாராளமாக கடன் வழங்க வேண்டும்
காரைக்கால் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்க முடியாது. அதை உணர்ந்து இன்றைக்கு படித்த இளைஞர்கள் பலர் சுயதொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பொருளாதார வசதி தடையாக உள்ளது. எனவே வேலை இல்லாமல் சிரமப்படும் பட்டதாரி இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற இந்த முத்ரா திட்டத்தின் மூலம் தாராளமாக கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்.
வங்கி கடனுதவி கேட்டு வங்கிகளுக்கு சென்றால் வங்கி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் பலரும் புகார் கூறுகின்றனர். அதுபோன்று ஏழை-எளிய மக்கள், போதுமான கல்வி அறிவு இல்லாதவர்கள் வங்கிகளுக்கு சென்றால் வெறுங்கையுடன் திரும்ப நேரிடுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற போக்கினை வங்கியாளர்கள் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் மேலாளர்கள் ஒருங்கிணைந்து கலந்து பேசி மக்களை அலையவிடாமல் பிரச்சனையை தீர்க்க திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அலைந்து திரிந்து வங்கிகளில் கடன் பெற்றவர்கள் அதை முறையாக திருப்பி செலுத்தவும் முன்வர வேண்டும்.
வங்கிகளில் கடனுதவி பெற்றவர்கள் அதை உரிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நீங்கள் மீண்டும் கடன் பெற முடியும். மற்றவர்களுக்கும் வங்கிகள் கடனுதவி வழங்க முடியும். வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு கடனுதவி வழங்கி அவர்களை உயர்த்திவிட வேண்டிய பொறுப்பு வங்கிகளுக்கு உள்ளது. அதுபோன்று வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பும் பயனாளிகளுக்கு உள்ளது. இருதரப்பினரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்தான் வங்கிகளின் கடன் திட்ட நோக்கம் நிறைவேறும்.
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.
இந்த முகாமில் கீதாஆனந்தன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கேசவன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளரும், புதுவை மாநில வங்கியாளர் குழுமம் ஒழுங்கிணைப்பாளருமான வீரராகவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முகாமில் வங்கியாளர் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் வங்கிகளில் வழங்கப்படும் கடன் திட்டங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது, பணமில்லா பணபரிவர்த்தனை குறித்து பொது மக்களுக்கு விளக்கப்பட்டதுடன், செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. அதுபோன்று இந்தியன் வங்கி சார்பில் இலவச சுயதொழில் பயிற்சி குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது.
மேலும், வங்கிகளின் சார்பில் பயனடைந்த வெற்றியாளர்கள், அவர்கள் எவ்வாறு வங்கி கடனுதவிகளை பெற்று வாழ்க்கையில் வெற்றி அடைந்தார்கள்? என்பதை விளக்கும் ஒலி-ஒளிக்காட்சி திரையிட்டுக்காட்டப்பட்டது. அதுபோன்று வங்கிகடனுதவி பெற்ற பயனாளிகள் சிலர் மேடையில் ஏறி அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த முகாமில் 107 பயனாளிகளுக்கு பல்வேறு வங்கிகளின் சார்பில் ரூ.2 கோடியே 78 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது.