ஆசிரியை கண்டித்ததாக புகார்: பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.முன்னதாக ஆசிரியை கண்டித்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
அறச்சலூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பேரண்டஅள்ளி கொத்தூரை சேர்ந்தவர் சேகர். இவர் ஒசூரில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருடைய மகள் தேவயானி (வயது 17). சேகரின் மாமனார் வீடு ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே கோபாலிபாறையில் உள்ளது. இங்கு தேவயானி தங்கியிருந்து அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தேவயானி விஷத்தை குடித்துவிட்டு வாந்தி எடுத்தார். இதைப்பார்த்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தக்காடையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்தபோது, பள்ளிக்கூடத்தில் ஆசிரியை ஒருவர் தன்னை கண்டித்து தாக்கியதாகவும், இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்துவிட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தேவயானி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து தேவயானி படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
காலாண்டு தேர்வு முடிந்து அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கினோம். இதைத்தொடர்ந்து மறுநாள் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்த தேவயானி இந்த சந்திப்பின்போது, இதுபற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியை தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிடுவார்கள் என்று பயந்து விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிலாம். ஆனால் ஆசிரியை அவரை தாக்கவோ, துன்புறுத்தவோ இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.