டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாயிருந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ராணிப்பேட்டையில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாயிருந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
வேலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமன் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று காலை ராணிப்பேட்டை பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த கலெக்டர் அங்கு உணவு தயாரிக்கும் இடங்களை பார்வையிட்டார். பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தருவது குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து ராணிப்பேட்டை வாரச்சந்தை அருகில் உள்ள கீழ்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ராணிப்பேட்டை நகரில் உள்ள 21-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்கள், வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
அப்போது ரொட்டிக்கார தெரு பகுதியில் ஸ்ரீராம் என்பவர் புதிதாக வீடு கட்டி கொண்டிருந்தார். கலெக்டர் அந்த வீட்டை ஆய்வு செய்தபோது ஸ்ரீராம் வீடு கட்டுவதற்காக தொட்டி மற்றும் டிரம்களில் தேக்கி வைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு உண்டானஅறிகுறிகள் மற்றும் டெங்குவை உருவாக்க கூடிய கொசுக்கள் இருந்ததை பார்த்தார். உடனடியாக ராணிப்பேட்டை நகரசபை ஆணையாளரிடம் வீட்டின் உரிமையாளர் ஸ்ரீராமுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் ராணிப்பேட்டை பஜார் தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள ஒரு வீடு நீண்டகாலமாக பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் மீது ஏறி பூட்டியிருந்த வீட்டை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அந்த வீட்டின் மேல் பகுதியில் உள்ள மீன்தொட்டி ஒன்றில் தண்ணீர் நிரம்பியிருப்பதையும் அதில் டெங்குவை உருவாக்க கூடிய கொசுக்கள் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் துணையோடு பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கலெக்டர் மீன் தொட்டியில் இருந்த தண்ணீரை கீழே கொட்டி கொசுக்களை அழிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிலவேம்பு கசாயம்
பின்னர் கலெக்டர் ராமன் சிப்காட்டில் உள்ள திருமலை கெமிக்கல்ஸ் தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு தொழிலாளர்களிடம் டெங்கு விழிப்புணர்வு குறித்து விளக்கினார். பின்னர் தொழிலாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
மேலும் கலெக்டர் மற்றும் தொழிற்சாலை அலுவலர்கள், ஊழியர்கள் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஆய்வின்போது வாலாஜா தாசில்தார் விஜயகுமார், ராணிப்பேட்டை நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம், ராணிப்பேட்டை நகரசபை சுகாதார அலுவலர் பாஸ்கரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகர் மற்றும் ராணிப்பேட்டை நகரசபை அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கலெக்டர் வீடுகள்தோறும் நேரடியாக வந்து ஆய்வு செய்து வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தது அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.