ஓட, ஓட விரட்டி சமையல் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

ஓட, ஓட விரட்டி சமையல் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

Update: 2017-10-19 22:45 GMT
வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 46). சமையல் தொழிலாளி. நேற்று மாலை இவர், அழகாபுரியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு அரிவாளுடன் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், முருகேசனின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் அந்த நபர், அவரை விடவில்லை. ஓட, ஓட விரட்டி முருகேசனை வெட்டினார். பின்னர் அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகேசனை அரிவாளால் வெட்டிய நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்